1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 12 அக்டோபர் 2024 (10:18 IST)

நான்கு தலைமுறை தாண்டியும் எல்லோர் மனதையும் கவர்ந்துள்ள 200க்கும் மேலான ஒரே மாடல் மோட்டார் சைக்கிள்களுக்கு ஆயுதபூஜை....

இன்றய காலகட்டத்தில் எவ்வளவோ புது புது விதங்களில் மோட்டார் சைக்கிள்கள் சந்தைக்கு வந்தாலும் 80கிட்ஸ் முதல் தற்போது வரை உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் பிடித்த இரு சக்கரம் என்றால் அது யமஹா ஆர்எஸ் 100 இந்த வகையான மோட்டார் சைக்கிள்கள் 1980 முதல் 1990 களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
 
பிறகு விற்பனையை நிறுத்தி கொண்டாலும் அப்போது வந்த ஆர்எக்ஸ் 100க்கு இன்று அளவும் மவுசு குறைந்தபாடில்லை பலர் இன்றும் அதனை தேடி தேடி சென்று மிகவும் பழுதடைந்தாலும் பல ஆயிரம் செலவு செய்து அதை புதுப்பித்து ஓட்டிச் செல்கின்றார்கள். 
 
அப்போது உள்ள பைக்கை இன்றளவும் வாங்கி செலவு செய்து பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
 
காரைக்காலில் கடந்த காலங்களில் விற்பனை வரி குறைவாக இருந்ததால் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் காரைக்காலில் இருந்து வாங்கி சென்றுள்ளனர்.
 
இந்த நிலையில் 40 ஆண்டுகள் பழமையான இந்த வாகனத்தை பழுது நீக்கி புத்தம் புதிதாக வடிவமைக்கும் நிறுவனத்தை காரைக்காலில் பால்ராஜ் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகின்றார். ஒவ்வொரு ஆயுத பூஜையன்றும் இவரது நிறுவனத்திற்கு பழுது பார்க்க வரும் காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து வரும் யமஹா வாகன ஓட்டிகள் மட்டும் இன்று ஒரு நாள் ஒன்று கூடி இந்த வாகனத்தில் மேலும் எந்தவகையான பழமை மாறாத மாற்றத்தை செய்யலாம் என்பது குறித்து விவாதிப்பார்கள் பின்னர் அனைவரும் ஒன்றாக பூஜை செய்வது வழக்கம்.
 
அதைப்போல் இந்தாண்டும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட ஒரே மாதிரியான யமஹா மோட்டார் சைக்கிள்களை கொண்டு வந்து அதற்கு பூஜை செய்தனர். 
 
பின்னர் 200க்கும் மேற்பட்ட வாகனங்களும் அணிவகுத்தபடி காரைக்காலின் அனைத்து சாலைகளிலும் ஊர்வலமாக சென்றார்கள்.
 
பழமையான வாகனத்திற்கு இன்னும் மவுசு இருப்பதை உணர்த்தும் விதமாக இந்த வாகன அணிவகுப்பு இருந்தது.