திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (16:48 IST)

ஆகஸ்ட் 31ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்.. உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு..!

ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்ற நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் ரேஷன் கடைகளில் அன்றைய தினம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உணவு வழங்கல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்க படுவதில்லை.

ஆனால், இம்மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வரும் ஆக.31-ம் தேதி அனைத்து நியாய விலை கடைகளும் இயங்கும். அன்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம்.

Edited by Siva