1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 6 ஜூலை 2021 (22:00 IST)

மதன் மனைவி கூறிய சாதாரண கார் எத்தனை லட்சம் தெரியுமா?

மதன் மனைவி கூறிய சாதாரண கார் எத்தனை லட்சம் தெரியுமா?
யூடியூப் மதன் மனைவி கிருத்திகா இன்று செய்தியாளர்களை சந்தித்த போது எங்களிடம் சொகுசு கார் இல்லை என்றும் சாதாரண ஆடி ஏ6 கார் மட்டுமே உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்
 
மேலும் எங்களிடம் இரண்டு ஆடி கார்கள் இருப்பதாக வெளிவந்த செய்தி தவறானது என்றும் எங்களிடம் ஒரே ஒரு கார் மட்டுமே உள்ளது என்றும் அதுவும் செய்தியில் குறிப்பிட்டபடி ஏ8 கார்கள் கிடையாது என்றும் ஏ6 கார் மட்டுமே ஒன்றே ஒன்று மட்டுமே எங்களிடம் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் ஆடி ஏ6 காரின் மதிப்பு தற்போது தெரியவந்துள்ளது. ஆடி ஏ6 காரின் எக்ஸ்ஷோரூம் விலை 54 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்று தகவல் வெளிவந்துள்ளது. 54 லட்சத்திற்கு வாங்கிய காரை சாதாரண கார் என்றும் சொகுசு கார் இல்லை என்றும் மதனின் மனைவி கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது