1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (22:49 IST)

''கானாகத்திற்குள் கரூர்'' என்கின்ற மரம் நடும் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரங்களை அகற்ற முயற்சி

karur
கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொண்டு வந்த கானாகத்திற்குள் கரூர் என்கின்ற மரம் நடும் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரங்களை அகற்ற முயற்சி - தட்டி கேட்க முயன்ற முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலரை தகாத வார்த்தைகளாலும், ஒருமையாலும் பேசி திட்டிய மாநகராட்சி அதிகாரியால் கரூரில் பரபரப்பு.
 
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆன நிலையில், முன்னாள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரபட்ட அனைத்து திட்டங்களையும் பெயர் மாற்றப்பட்டு வரும் நிலையில் அதிமுக ஆட்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது கரூர் மாநகரில் மக்களுக்கு நிழல் கொடுக்கும் கானாகத்திற்குள் கரூர் என்கின்ற திட்டத்தினை கொண்டு வந்து கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரங்கள் நடப்பட்டு திமுக ஆட்சி அமைந்தும் கூட இன்றும் எம்.ஆர்.வி டிரஸ்ட் சார்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் லாரிகளில் தண்ணீர் ஊற்றப்பட்டு வந்தன. இந்நிலையில், கோவை சாலை 80 அடி சாலையின் அருகே இருந்த மரங்களை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் முற்பட்டுள்ளனர். அப்போது மரங்களுக்கு முன்னர் பாதுகாப்பாக போடப்பட்டிருந்த கம்பி வேலிகளை கட் செய்துள்ள நிலையில் முன்னாள் கவுன்சிலரும், மேற்கு நகர செயலாளர் சக்திவேல், கிழக்கு நகர செயலாளரும், தற்போதைய மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உதவியாளர் ரமேஷ் ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது, மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் மதி என்பவரும், துப்புரவு மேற்பார்வையாளர் சேகர் ஆகியோர் அதிமுக பிரமுகர்களை ஒருமையில் பேசியதோடு, கை நீட்டி மிரட்டியுள்ளனர். இந்நிலையில் பொதுமக்களும், அதிமுக வினர் அதிகளவில் திரண்டதையடுத்து அங்கிருந்து மாநகராட்சி ஊழியர்கள் ஓடியுள்ளனர். ஆட்சி எதுவாக அமைந்தாலும் சரி, ஆனால், யார் வைத்த பச்சை மரங்களை கூட அகற்றி, அதில் அரசியல் செய்யும் திமுக ஆட்சிக்கு இப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.