வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 11 நவம்பர் 2023 (12:38 IST)

தியேட்டரில் அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல்

ags theater
சென்னை தேனாம்பேட்டை ஏஜிஎஸ் தியேட்டரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மகன் மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை ஏஜிஎஸ் தியேட்டரில் அமைச்சர் KKSSR.ராமச்சந்திரன் மகன் மற்றும் பேரன் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

தியேட்டரில் பின் இருக்கையில் இருந்து ஆபாசமாக கூட்டலிட்டதை அமைச்சர் KKSSR.ராமச்சந்திரன் பேரன் தட்டியுள்ளார். இதில், பேரனுக்கும் 6 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், 6 பேர் கொண்ட கும்பல்  தாக்கியதில் அமைச்சரின் பேரன் கதிருக்கு வாய் உடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, 6 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியது. இதுகுறித்து அறிந்த பாண்டிபஜார் போலீஸார் தியேட்டருக்கு  நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.