கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய உதவிப் பேராசிரியர் கைது!
கலைக்கல்லூரி கல்லூரி மாணவியிடம் அத்துமீறி நடந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொன்னேரியில் உலக நாத நாராயணசாமி அரசினர் தனாட்சி கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றானர்.
இந்தக் கல்லூரியில் ஆங்கில உதவிப் பேராசிரியர் மகேந்திரம், சில நாட்களுக்கு முன் ஒரு மாணவிக்கு செல்போனில் தொடர்புகொண்டு, வீட்டுக்கு வா பழகலாம் என அழைப்பு விடுத்தததாக தெரிகிறது.
கல்லூரி மாணவி இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகாரளித்தார். இதுகுறித்து விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து மகேந்திரனை போலீஸார் கைது செய்தனர்.