வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2016 (15:11 IST)

எம்எல்ஏ பதவிக்கு ஆசைப்படும் உதவி கமிஷனர்கள்: அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல்

அதிமுக சார்பில் போட்டியிட இரண்டு உதவி கமிஷனர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இது தமிழக காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி காவல்துறை உயர் அதிகாரிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தற்போது, சென்னை மது விலக்கு போலீஸ் உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்ற பீர்முகமது என்பவர் கடந்த 3ஆம் தேதி திருவல்லிக்கேணி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

இவரை தொடர்ந்து, சேலம் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதா தகவல்  வெளியாகி உள்ளது.
 
பீர்முகமது வருகிற மே மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இதேபோல் கணேசன் ஜூலை மாதத்துடன் ஓய்வு பெற உள்ளார் இந்நிலையில், போலீஸ் அதிகாரிகள் பணியில் இருக்கும் போது தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் இருவரும் பணியில் இருந்து விருப்ப ஓய்வு கேட்டு டிஜிபியிடம் கடிதம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், ஓய்வு பெரும் நேரத்தில் இருவரும் அதிமுக சார்பாக விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இவர்கள் இருவரும் முன் கூட்டியே பணியில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளதால் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிகிறது.
 
பணியில் இருக்கும் போலீசார் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் ஆனால் அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்துள்ள போலீஸ் அதிகாரிகள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தால் தேர்தலில் போட்டியிட முடியும். அந்த அடிப்படையில் இருவரும் விருப்ப ஓய்வு கேட்டு இருக்கின்றனர் என்று டிஐிபி அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.