1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 25 மே 2016 (15:59 IST)

தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு: மீண்டும் ஜூன் 3-ஆம் தேதி கூடுகிறது!

15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. தற்காலிக சபாநாயகர் செம்மலை திருக்குறளுடன் இன்றைய கூட்டத்தை ஆரம்பித்தார்.


 
 
சட்டசபை தொடங்கியதும், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவேல் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர். சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
 
பின்னர் தற்போதைய சபாநாயகர் செம்மலை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். முதலமைச்சர் ஜெயலலிதா முதலில் சட்டசபை உறுப்பினராக பதவியேற்க ஒவ்வொருவரும் வரிசையாக பதவியேற்றனர்.
 
இன்றைய கூட்டத்துக்கு வருவாரா என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி இன்று 5 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டசபைக்கு வந்து சட்டசபை உறுப்பினராக பதவியேற்றார்.
 
முன்னதாக சட்டசபை வளாகத்தில் சந்தித்த முதல்வர் ஜெயலலிதாவும், எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் வணக்கம் செலுத்திய அபூர்வு நிகழ்வு நடந்தது.
 
மீண்டும் ஜூன் 3-ஆம் தேதிக்கு சட்டசபை கூட்டத்தை ஒத்திவைத்துள்ளார் தற்காலிக சபாநாயகர் செம்மலை. மேலும், அன்றைய தினம் காலை 10 மணிக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல்  நடைபெறுவதால், போட்டியிட விரும்புவோர்  ஜூன் 2-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் மனு தாக்கல் செய்யலாம்  என்று பேரவைச் செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.