சசிகலாவை எதிர்க்கும் அஸ்வின்?: விரைவில் சட்டசபை தேர்தல் என டுவிட்டரில் சூசகம்!

சசிகலாவை எதிர்க்கும் அஸ்வின்?: விரைவில் சட்டசபை தேர்தல் என டுவிட்டரில் சூசகம்!


Caston| Last Modified திங்கள், 6 பிப்ரவரி 2017 (14:04 IST)
தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தவாறு உள்ளனர்.

 
 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சூசகமாக சசிகலா முதல்வராவதை தனது டுவிட்டர் பதிவு மூலம் எதிர்த்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் 234 வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்க உள்ளது என கூறியிருந்தார்.


 
 
அதாவது, தமிழகத்தில் 234 தொகுதிகள் இருப்பதாகவும், விரைவில் ஆட்சி கலைந்து தேர்தல் நடைபெறும் எனவும் அதில் இளைஞர்கள் போட்டியிட வேண்டும் என அஸ்வின் மறைமுகமாக அதில் கூறியுள்ளார். இதனையடுத்து பலரும் அஸ்வினின் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதே போல நடிகர் கமலும் தனது டுவிட்டரில் மறைமுகமாக சசிகலாவை விமர்சிக்கும் விதமாக ஒரு திருக்குறளை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :