ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2024 (15:11 IST)

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மீண்டும் வாய்ப்பு.. காலக்கெடு நீட்டிப்பு..!

presidency college
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதற்கு முன் விண்ணப்பிக்காத மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை  அதாவது ஜூலை 03 முதல் ஜூலை 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள்  ‘https://tngasa.in’ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
 
முன்னதாக அரசு கலை கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் கடந்த சில நாட்களாக விண்ணப்பித்த நிலையில்  இதுவரை 2 லட்சத்து 58,527 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்  அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும்,  தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை தேதி மற்றும் முழு விவரங்கள் அவர்களது செல்போனுக்கு அனுப்பி வைக்கபப்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மே 28 முதல் ஜூன் 29-ம் தேதி வரை இருகட்டங்களாக நடத்தப்படும் என்றும் முதலாமாண்டு வகுப்புகள் ஜூலை 3-ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தான் தற்போது ஜூலை 5 வரை மீண்டும் விண்ணப்பம் செய்ய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva