1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (21:37 IST)

முதல் ஆளாக நான் ஆயுதத்தோடு நிற்பேன்: வைகோ

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒழிக்க ஆயுதத்தோடு போராடவும் தயாராக வேண்டும். அதில் முதல் ஆளாக நான் ஆயுதத்தோடு வந்து உடைப்பேன் என வைகோ தெரிவித்துள்ளார்.


 

 
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மக்கள் போரட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களுடன் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து போராடி வருகின்றனர். இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய கைவிடும் வரை இந்த போராட்டம் நடைப்பெறும் என தெரிவித்து வருகின்றனர்.
 
தமிழகத்தில் விவசாய நிலங்களை காப்பாற்ரவே இத்தகைய போராட்டம் நடைபேற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தில் பல அரசியல் தலைவர்களும் கலந்துக் கொண்டனர். சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டு மத்திய அர்சு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதுகுறித்து கூறியதாவது:-
 
தமிழகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுப்பவன் நான் தான். மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும் முதலில் குரல் கொடுத்தது நான்தான். அதன்பிறகு நம்மாழ்வார் குரல் கொடுத்தார். இது போன்ற போராட்டங்களில் கட்சி பெயர்களையோ, கொடிகளையோ பயன்படுத்தக் கூடாது என்று கூறியதும் நான்தான்.
 
ஸ்டெர்லைட் ஆலை வெளிமாநிலத்தில் அமைக்கப்பட்ட போது ஆயுதம் ஏந்தி போராடிய பொதுமக்கள் 300 கோடி மதிப்பிலான அலுவலகத்தை உடைத்தெறிந்தனர். அதே போன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒழிக்க ஆயுதத்தோடு போராடவும் தயாராக வேண்டும். அதில் முதல் ஆளாக நான் ஆயுதத்தோடு வந்து உடைப்பேன், என கூறியுள்ளார்.