1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (20:02 IST)

தடையை மீறி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்: அர்ஜூன் சம்பத்

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என அர்ஜுன் சம்பத் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் நிறுவுதல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவித்திருந்தது. இதற்கு இந்து மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
டாஸ்மாக் கடைகளில் எந்தவிதமான தனிமனித இடைவெளியும் இன்றி இயங்கி கொண்டிருக்கும் நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடத்துவதில் என்ன தவறு என்ற கேள்வி பாஜக தரப்பினர் எழுப்பினர் 
 
இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகள் தடையை மீறி தமிழகம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்படும் என அர்ஜுன் சம்பத் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது