ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 5 ஏப்ரல் 2017 (13:15 IST)

விவசாயிகளே போயஸ் கார்டன் மற்றும் கோபாலபுரம் வீட்டு வாசலில் போராடுங்கள்: அர்ஜுன் சம்பத் பேட்டி

கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இந்து மக்கள் கட்சியின் தமிழகம் தலைவர் அர்ஜின் சம்பத் ஸ்ரீ ராமநவமியையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி ஸ்ரீ ராமபிரானின் படத்தையேந்தி அங்கிருந்து ஊர்வலமாக வந்தார். இதையொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புனிதமான ராமநவமி தினம், இந்த ராமநவமி தினத்தையொட்டி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் அனைத்து திருக்கோயில்களிலும் அதே இடத்தில் ராமர் கோயில் அமைய வேண்டுமென்றும், ராமர் பாலத்தை காத்திட வேண்டியும் ஆங்காங்கே பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்ட பிரசாதங்கள் தரப்பட்டு வருகின்றது.


 


பா.ஜ.க கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ராமர்கோயில் கட்டுவதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார். உத்திரப்பிரதேஷ மக்கள் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக தீர்ப்பளித்து வெற்றி பெறசெய்துள்ளார்கள். ஆகவே இந்த நேரத்தில் பாரத பிரதமர் மோடியும், உத்திரப்பிரதேஷ முதல்வர் யோகி ஆதித்யனாத்தும், நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டத்தை கொண்டு வந்து அடுத்த ராமநவமிக்குள் பிரமாண்ட ராமர் ஆலயத்தை ஆயோத்தியில் கொண்டு வரவேண்டுமென்று கோரிக்கையை வலியுறுத்துகிறோம் என்று கூறிய அர்ஜின் சம்பத், தமிழகத்தில், உச்சநீதிமன்றத்தின் ஆணையின் படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் அருகே உள்ள மதுபானக்கடைகளை அகற்றிய அரசு, அந்த கடைகளை உள்ளூர் பகுதிக்கும், கோயிலின் அருகே கொண்டு வர திட்டம் தீட்டியுள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம் என்று பல ஆலயங்கள் முன்பும், அருகிலேயும் மதுபானக்கடைகளை கொண்டு வர திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் அதை நிறுத்த வேண்டுமென்றும், ஏற்கனவே மதுவிலக்கு அடிப்படை கொள்கைகளை வலியுறுத்தி பூட்டி வருகின்றனர். ஆகையால் கோயில் மற்றும் வணிக நிறுவனங்கள் அருகே மதுபானக்கடைகளை வைத்தால் மஹா பாரத யுத்தத்தை சந்திக்க வேண்டுமென்றும் எச்சரித்தார்.

மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றோம், அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள போயஸ் கார்டன் மற்றும் கோபாலபுரம் பகுதியில் போராட்டம் நடத்த மாற்றியோசிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். ஏனென்றால் 50 ஆண்டு காலமாக இந்த கட்சிகள் இருவர்கள் தான் மாறி, மாறி ஆட்சி செய்து விவசாயம் கெட்டுப்போனதற்கே காரணம் என்றும் குறை கூறினார்

கரூரிலிருந்து சி.ஆனந்தகுமார்