ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (10:08 IST)

நீங்க துணை முதலமைச்சர் ஆகப்போறீங்களா? – உதயநிதியே சொன்ன பதில்!

udhayanithi
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இதுகுறித்து அவரே பதில் அளித்துள்ளார்.



தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் டாப்பிக் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி. 2021 தேர்தலுக்கு முன்னதாக திமுக இளைஞரணி செயலாளராக களம் இறங்கிய உதயநிதிக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் திமுக வென்றபோதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டது.

ஆனால் அந்த சர்ச்சைகள் அடங்கும் வரை எம்.எல்.ஏவாகவே தொடர்ந்த அவருக்கு அதற்கு பிறகு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு துணை முதல்வர் பதவி என்ற கிசுகிசுப்புகள் தொடங்கியுள்ளதால் விரைவில் அவர் துணை முதல்வர் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நேற்று பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “எல்லா அமைச்சர்களுமே முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்” என்று கூறி சென்றார்.

எனினும் சேலம் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பிறகு இந்த புதிருக்கு விடை கிடைக்கும் என காத்திருக்கின்றனர் அரசியல் வட்டாரங்களை சார்ந்தோர்.

Edit by Prasanth.K