Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட தவறான, தடை செய்யப்பட்ட மாத்திரைகள்?: மருத்துவர் ஆவேசம்!

ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட தவறான, தடை செய்யப்பட்ட மாத்திரைகள்?: மருத்துவர் ஆவேசம்!


Caston| Last Modified வெள்ளி, 30 டிசம்பர் 2016 (12:13 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறிவந்தாலும் உரியவர்கள் அதற்கான விளக்கத்தை இன்னமும் அளிக்கவில்லை. இதனால் அந்த சந்தேகம் நாளுக்கு நாள் வலுபெறுகிறது.

 
 
ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்காக தவறான மாத்திரை கொடுக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனையின் இ-மெயில்களில் இருந்து தகவல் கசிந்தது. இதனை ஆங்கில ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டது.
 
இந்நிலையில் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தி அப்பல்லோ மருத்துவமனைக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 
அதில், மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக புரோப்பிடன் 75 மில்லி கிராம் மருந்தை ஜெயலலிதா எடுத்ததாகச் சொல்கிறார்கள். இந்த மருந்தை அவர் எடுத்துக் கொண்டாரா? சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட, பயோகிளிட்டசோன், ரொசிகிளிப்டஜொன் போன்ற மாத்திரைகள் அவருக்குக் கொடுக்கப்பட்டதா?.
 
புரோப்பிடனும் பயோகிளிட்டசோனும் இருதயத் துடிப்பை பாதிக்கும் என மருத்துவ ஆய்வுகளில் தெளிவாக உள்ளது. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த தவறான மாத்திரைகள் கொடுக்கப்பட்டன என கூறப்படுகிறது.
 
புரோப்பிடன் கொடுத்தாலே இருதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும். அப்போலோ மருத்துவமனையின் இ-மெயில்களில் இந்தத் தகவல் கசிந்துள்ளது என அந்தத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது என மருத்துவர் புகழேந்தி கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :