1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஜூலை 2024 (10:05 IST)

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கல் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையா? தீவிர விசாரணை..!

ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு நினைவு அஞ்சலிக்குள் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருப்பதை அடுத்து இது ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்18 ஆம் தேதி ரவுடி ஆற்காடு சுரேஷ் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகில் வைத்து படுகாலை செய்யப்பட்டார். ஆற்காடு சுரேஷ் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆம்ஸ்ட்ராங் உதவியதாலேயே ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
 
ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஆம்ஸ்ட்ராங் பெயர் சேர்க்கப்படாததால் இரு தரப்புக்கு இடையே முன் விரோதம் நீடித்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஓராண்டு நினைவு அஞ்சலி வருவதற்குள் சபதம் எடுத்து ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை
 
 ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஆர்ம்ஸ்ட்ராங் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக அவரது தரப்பினர் சந்தேகம் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. இதனால் ஆர்ம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், உளவுத்துறை காவல்துறையை இதுகுறித்து எச்சரித்ததாகவும் காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங்குக்கு இந்த தகவலை சொன்னதாகவும் கூறப்படுகிறதுஜ். பழிக்குப் பழி கொலை சம்பவங்களால் சென்னை மீண்டும் குற்ற நகரமாக மாறி இருப்பதாக சென்னை மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran