திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2017 (10:39 IST)

கமல்ஹாசனுடன் கை கோர்க்கும் அறப்போர் இயக்கம்...

தமிழகத்தில் செயல்படும் அறப்போர் இயக்கம் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது.


 

 
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நவ.7ம் தேதி அவரது பிறந்தநாளன்று அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள்ளை முன்னிறுத்தி போராடி வரும் அறப்போர் இயக்கம் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது. 


 

 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஷிம் பஷீத் கூறிய போது “நடிகர் கமல்ஹாசன் பல இயக்கங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எங்களுடன் ஆலோசனை நடத்தினார். லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கோரிக்கை. இது தொடர்பாகவும் கமல்ஹாசனுடன் நாங்கள் ஆலோசனை செய்துள்ளோம். அவர் உட்பட ஊழலுக்கு எதிராக யார் களம் இறங்கினாலும் அவர்களுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.