கைது செய்யப்படுகிறாரா முருகதாஸ்? மீண்டும் கிளம்பிய சர்கார் பிரச்சனை..

Last Modified செவ்வாய், 27 நவம்பர் 2018 (16:23 IST)
தீபாவளி அன்று விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களை எரிப்பது போன்றும், அரசை விமர்சிப்பது போன்றும் வசனங்கள் இருந்தன. 
 
இதனால் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால், மறுதணிக்கை செய்யப்பட்டு படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு கருதி இயக்குனர் முருகதாஸ் நவம்பர் 9 ஆம் தேதி முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 
 
அன்று, வழக்கை விசாரித்த நீதிபதிகள் முருகதாஸை 27 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இரண்டு நிபந்தனைகளை முன்வைத்தனர். 
அதன்படி, சர்கார் படத்தில் இலவசங்களை தூக்கி எரிந்ததற்கும், அரசை விமர்சிக்கும் வசங்களை வைத்ததற்கும் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், அதோடு இனி வரும் தனது படங்களில் அரசியல் காட்சிகளோ அரசை விமர்சிக்கும் காட்சிகளோ இடம்பெறக்கூடாது என உத்தரவாதம் பத்திரம் சமர்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 
இதனையடுத்து இது குறித்து முருகதாஸுடன் கலந்து பேசி முடிவை வெளியிட வேண்டும் என முருகதாஸ் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதன் பெயரில் இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
இதனால், நாளை வெளியாகும் தீர்ப்பில்தான் முருகதாஸுக்கு ஜாமின் கிடைக்குமா? அல்லது இந்த வழக்கு விசாரணை காவல் துறையிடம் செல்லுமா என்பது தெரியவரும். 


இதில் மேலும் படிக்கவும் :