வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 13 பிப்ரவரி 2019 (11:20 IST)

2000 ரூபாய் வழங்குவதற்கு எதிராக முறையீடு!!!

தமிழகத்தில் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 2000 ரூபாய் வழங்கும் அறிவிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் தமிழகத்தில் உள்ள 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். அந்த தொகையானது இந்த மாத இறுதிக்குள் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் 2000 ரூபாய் வழங்குவதற்கு எதிராக முறையீடு செய்துள்ளார். எந்த கணக்கெடுப்பை வைத்து 60 லட்சம் ஏழைக்குடும்பங்களுக்கு அரசு இந்த தொகையை வழங்க இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தே அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. இது சட்டவிரோதமான செயலாகும்.
ஆகவே தமிழக அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருக்கிறார். அவரின் இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.