வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (20:37 IST)

நீட் தேர்வால் மேலும் ஒரு உயிரிழப்பு!

நீட் தேர்வு எழுத தனது மகளை அழைத்து சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழக மாணவர்களுக்கு தேர்வு எழுதும் மையம் தமிழகம் அல்லாது பிற மாநிலங்களிலும் ஒதுக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகிய நிலையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், தனது மகனை கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுத அழைத்துச் சென்றபோது மாரடைப்பால் இறந்தார்.
 
அதேபோல் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்றவரும் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் சினிவாசன் என்பவர் தனது மகளை நீட் தேர்வு எழுதுவதற்கு புதுச்சேரி அழைத்துச் சென்றபோது மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.