அரசியல் முக்கிய புள்ளி பாஜகவில் இணைகிறார்! – க்ளூ கொடுத்த பாஜக யூத் விங்!
பெரிய கட்சியை சேர்ந்த அரசியல் புள்ளி ஒருவர் பாஜகவில் இணைய இருப்பதாக பாஜக யூத் விங் தலைவர் முருகானந்தம் கூறியுள்ளார்.
சமீபத்தில் விபி துரைசாமி அவர்கள் திமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில் அவர் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தலைமையில் தன்னை பாஜகவில் இணைந்து கொண்டார். திமுகவில் இருப்பவர்கள் பாஜக செல்வது என்பது மிகவும் அரிதாகவே நடந்த நிலையில் இந்த நிகழ்வு திமுக தலைமையை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதற்கு முன்னால் திமுக விவசாய அணி செயலாளர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட கே.பி.ராமலிங்கமும் பாஜகவில் இணைய பேசி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்பட்டது, இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக இளைஞர் அணி தலைவர் ஏ.பி.முருகானந்தம் “முக்கியமான கட்சியிலிருந்து ஒரு பெரும்புள்ளி, வெளியே வரக் காத்திருக்கிறது..” என்று பதிவிட்டுள்ளார். இணையப்போகும் அந்த முக்கியப்புள்ளியின் முதல் எழுத்து “P” என்ற எழுத்தில் தொடங்கும் என க்ளூவும் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து பலர் பி வரிசையில் தொடங்கும் அரசியல்வாதிகள் பலரின் பெயரை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். அந்த நபர் யார் என விரைவில் அவரே சொல்வார் என பலர் எதிர்பார்த்துள்ளனர்.