செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (20:15 IST)

அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவுக்கு ஒரு சீட்டு கூட வராது - நடிகர் எஸ்.வி.சேகர்

அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவுக்கு ஒரு சீட்டு கூட  வராது என்று பிரபல  நடிகர்  எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை ரமேஸ்வரம் மாவட்டத்தில் தன் பாஜக தொண்டர்களுடன் தொடங்கினார். 

அண்ணாமலையில் நடைப்பயணம் பற்றி நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழ் நாடு பாஜகவில் சரியாக தலைமை   நிலைமையில் இல்லையென்றால் எல்லாம் ஆடத்தான் செய்யும். அதையொன்றும் பண்ண முடியாது. தலை சரியாக இருந்தால்… நமக்கு நடைப்பயணம் போகவே பஸ்ஸில் டைம் இல்லை…அப்படிப்பட நடைப்பயணம் அண்ணாமலை பஸ்ஸில்  போய்க் கொண்டிருக்கிறார்…ஒரு நாளைக்கு 2 கிமீ., 3 கிமீ நடக்கிறாராம்…அதுவே அவருக்கு முடியலயாம்…சிங்கம் என்று அவரே சொல்கிறார்….இந்த நடைப்பயணத்தினால் எதுவும் ஆகப்போவதில்லை என்று கூறினார்.