செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (18:06 IST)

திடீரென இலங்கை செல்லும் அண்ணாமலை: என்ன காரணம்?

Annamalai
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென இலங்கை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மையத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளது. 
 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் எல் முருகன் ஆகியோர் இலங்கை புறப்பட்டு சென்றனர். இலங்கையில் அவர்கள் மூன்று நாட்கள் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. 
 
இலங்கை பயணத்தின் போது தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran