வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (16:41 IST)

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை.. அன்றே சொன்னார் அண்ணாமலை..!

அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் கடந்த மாதமே பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அண்ணாமலை தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த ஜூன் 19ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி முறைகேடுகள் செய்து 28 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி இருந்தார் என்றும் இது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்
 
இந்த விவகாரத்தில் அமைச்சர் பொன்முடியை முதல்வர் பதவி நீக்க செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்பான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதே வழக்கில் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran