ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (17:37 IST)

தமிழக காவல்துறையா? அறிவாலயத்தை காக்கும் துறையா? அண்ணாமலை அறிக்கை!

Annamalai
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து அண்ணாமலை காவல் தமிழக காவல்துறையை கடுமையான விமர்சனம் செய்த தமிழக காவல்துறை நேற்று விளக்கம் அளித்திருந்தது
 
அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்று தமிழக காவல்துறை கூறிய நிலையில் அண்ணாமலை தற்போது விரிவாக அறிக்கை ஒன்றின் மூலம் பதில் அளித்துள்ளார் 
 
அந்த அறிக்கையின் தலைப்பு தமிழக காவல்துறையா அல்லது அறிவாலயத்தை காக்கும் காவல்துறை என்பது தான். அதில் கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளின் செயல் என்பதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.
 
தமிழக அரசு மற்றும் காவல்துறை மௌனமாக இருக்கும் நிலையில் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பத்திரிக்கையாளர் வாயிலாக சில கேள்விகளை முன்வைத்தோம் என்றும் அவர் கேட்ட கேள்விகளையும் கூறியுள்ளார்
 
தமிழக உளவுத் துறையின் செயல்பாடுகள் பற்றியும் ஒரு சாராரை மட்டுமே அரவணைத்து செயல்படும் உளவுத்துறை நோக்கத்தைப் பற்றியும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் அறிக்கையின் முழு விவரம் இதோ