செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (15:51 IST)

எனக்கு இந்தி தெரியாது.. நானும் திராவிடன்தான்! – பாஜக அண்ணாமலை கருத்து!

Annamalai
இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதிய பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அதில் பிரதமரின் திட்டங்களை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் பாஜகவினர் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “நானும் கருப்பு திராவிடன்தான். எனக்கும் சத்தியாமாக இந்தி தெரியாது. இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். தேவைப்பட்டால் இது தொடர்பாக பாஜக தலைமைக்கு தமிழக பாஜக கடிதம் எழுத தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.