வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2023 (07:44 IST)

உதயநிதி ஸ்டாலின் ஒரு குழப்பவாதி. என்ன பேசவேண்டும் என்று தெரியாமல் பேசுகிறார்: அண்ணாமலை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு குழப்பவாதி என்றும் அவர் என்ன பேச வேண்டும் என்று தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மக்கள் என் மண் என்ற பயணம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று நடந்தது. அப்போது அவர் அங்கு பேசிய போது ’ஒன்பது ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகவும்  ஆனால் தமிழ்நாடு மதுபிற்பனை அரிவாள் கலாச்சாரம் கனிமவள கொள்ளை என  மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 
 
முதலமைச்சர் குடும்பம் மட்டுமே ஆட்சியை செய்து கொண்டிருக்கிறது என்றும் கூறிய அவர்  திமுகவினருக்கு கோவில் உண்டியல் மீது மட்டுமே கலந்துள்ளது என்று தெரிவித்தார். 
 
உதயநிதி ஸ்டாலின் ஒரு குழப்பவாதி என்றும் அவர் என்ன பேச வேண்டும் என்று தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார் என்றும்  சனாதான கொள்கையை திமுக மட்டுமல்ல யாராலும் ஒழிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva