1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:47 IST)

உதயநிதி கார் கமலாலயம் வர ஒரு தகுதி வேண்டும்: அண்ணாமலை

annamalai
உதயநிதியின் கார் கமலாலயம் வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
நேற்று சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி எம்எல்ஏ, என்னுடைய காரை தவறாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் எடுத்துச் செல்வதில் எந்த தவறும் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் அந்த காரை கமலாலயம் பக்கம் செல்ல விட்டுவிட வேண்டாம் என்று கூறினார் 
 
அவரது இந்த காமெடியான பேச்சு சட்டமன்றத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘ உதயநிதியின் கார் கமலாலயம் வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்றும், தலைமுறை தலைமுறையாக அரசியல் செய்பவர்களுக்கு கமலாலயத்தில் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்