செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (14:14 IST)

குழந்தைக்கு முதலமைச்சரின் பெயரை வைத்த அண்ணாமலை.. பெற்றோர் அதிர்ச்சி..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் பெற்றோர் குழந்தைக்கு பெயர் வைக்க சொன்ன நிலையில் அவர் உத்தர பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியனார் என்ற பெயர் வைத்தது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பிரதமர் மோடி பிறந்த நாளை ஒட்டி பாஜக சார்பில் நடத்தப்பட்ட 73 ஜோடிகள் திருமணம் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். 
இன்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர் தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு அண்ணாமலை இடம் கேட்டுக் கொண்டனர் 
 
அந்த குழந்தைக்கு யோகி ஆதித்தியனார் என்ற பெயரை சூட்டினார். உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சரின் பெயரை அண்ணாமலை வைத்ததை கேட்டு அந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Siva