செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (11:45 IST)

ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை மாட்டிய அண்ணாமலை!

ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை மாட்டிய அண்ணாமலையால்  அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்திருந்தார். அதன் ஒரு பகுதியாக கோல்டு வின்ஸ், துரைசாமி நகரில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று அங்கிருந்த மக்களிடம் ரேஷன் கார்டுதார்களுக்கு மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். 
 
அப்போது ரேஷன் கடையின் உள்ளே சென்ற அண்ணாமலை அங்கு முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு அருகில் பிரதமர் மோதியின் படத்தை மாட்டினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
 
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்துள்ள பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் பிரதமர் மோடியின் படத்தை மாற்றியது சர்ச்சையாகியிருந்தது. அதற்காக அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து பாஜக பிரமுகரை ஆலாந்துறை போலீசார் கைது செய்திருந்தனர்.