திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (13:35 IST)

நகைக்கடன் தள்ளுபடி என பெண்களை ஏமாற்றி விட்டது திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு

நகை கடன் தள்ளுபடி என தேர்தல் அறிக்கையில் கூறி பெண்களை திமுக ஏமாற்றி விட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
அண்ணாமலை தற்போது மதுரையில் தனது என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை நடத்தி வருகிறார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது  திருமங்கலத்திற்கு என ஒரு பார்முலா உள்ளது. திருமங்கலம் அரவக்குறிச்சி போன்ற ஃபார்முலாக்கள் தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக உள்ளது. 
 
திருமங்கலம் பார்முலா இந்தியா முழுவதும் தற்போது பரவி விட்டது. இதை மாற்ற வேண்டும் என்றால் திருமங்கலத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும்.  திமுக தனது தேர்தல் அறிக்கையில் நகை கடன் தள்ளுபடி எனக்கூறி 68 சதவீத பெண்களை ஏமாற்றி விட்டது 
 
காவிரியில் தண்ணீர் தரவில்லை என திமுகவினர் யாராவது குரல் கொடுத்தார்களா? முதலமைச்சர் பெங்களூர் சென்றபோது நாங்கள் கூறியதை கேட்காமல் இன்றைக்கு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி தண்ணீரை விடச் சொல்கிறார் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
 
Edited by Siva