1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (11:12 IST)

பிடிஆர் பழனிவேலிடம் மன்னிப்பு கேட்ட சரவணன் பாஜகவில் இருந்து நீக்கம்: அண்ணாமலை அதிரடி

annamalai
பாஜகவைச் சேர்ந்த மதுரை மாவட்ட செயலாளர் சரவணன், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை சந்தித்து மன்னிப்பு கேட்டதை அடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்
 
நேற்று மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்  கார் மீது பாஜகவினர் செருப்பை வீசியதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் பாஜகவின் கீழ்தரமான அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்று கூறிய மதுரை மாவட்ட பாஜக மாவட்ட செயலாளர் சரவணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார்
 
இந்த நிலையில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை சந்தித்து வருத்தம் தெரிவித்த நிலையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக சரவணன் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்