திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 மே 2023 (14:59 IST)

பள்ளியை இடித்துவிட்டு திருமண மண்டபம் கட்டுவதா? அமைச்சர் உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம்..!

Annamalai
பள்ளியை இடித்துவிட்டு திருமண மண்டபம் கட்டுவதா? என விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 
 
சென்னை திருவல்லிக்கேணி பங்காரு தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக் கட்டிடத்தை இடித்துவிட்டு, திருமண மண்டபம் கட்டப் போவதாக, நாளிதழில் வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 
 
அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின்  தொகுதியில் உள்ள இந்தப் பள்ளியில் 115 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் சுமார் பத்தாயிரம் சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடித்து, புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்துவிட்டு, அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பள்ளிகளுக்கான இடத்தில், வணிக வளாகங்களை அமைக்கும் எண்ணம் இருந்தால், அது வன்மையான கண்டனத்துக்குரியது.
 
உடனடியாக, இந்தப் பள்ளி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த பள்ளிகள் அனைத்திற்கும், அதே இடத்தில் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும், மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம் என்றும் தமிழக பாஜக சார்பில்  சார்பாக வலியுறுத்துகிறேன்.
 
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran