ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (11:42 IST)

பதவிக்கு வயது அவசியமில்லை - அதிருப்தி குறித்து அண்ணாமலை பேட்டி!

பாஜக கட்சியைப் பொறுத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் இணைத்து அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பு என அண்ணாமலை பேட்டி.

 
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவி வகித்து வந்த நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து எல்.முருகன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, பாஜக கட்சியைப் பொறுத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் இணைத்து அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பாகத்தான் பார்க்கிறேன். இதில் வயது என்பது முக்கியமான விஷயம்  கிடையாது. 
 
கட்சியில் இல. கணேசன் போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள், மற்றொருபுறம் பல பேரால் தாக்கப்பட்ட நரேந்திரன் போன்றவர்களும் இருக்கிறார்கள். எனவே இது தனிமனித கட்சி கிடையாது என தெரிவித்துள்ளார்.