1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (10:48 IST)

உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை - அமைச்சர் கே.பி.அன்பழகன்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்.
 
அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் வெளியிட்டுள்ளார். 
 
அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும். அதேபோல உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கூடுதல் கல்விக்கட்டணம் வர வாய்ப்பு நேரிடும். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.