செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 27 ஜூலை 2020 (20:04 IST)

தமிழகத்தில் தரமற்ற பொறியியல் கல்லூரிகளா? அண்ணா பல்கலை மறுப்பு

தமிழகத்தில் தரமற்ற பொறியியல் கல்லூரிகள் இருப்பதாக வெளிவந்துள்ள தகவல்களை அண்ணா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 89 கல்லூரிகளில் தரமானது என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்றும் அண்ணா பல்கலை குறிப்பிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் தரமானவை, தரமற்றவை என எந்த பாகுபாடும் செய்யவில்லை என்றும் இதன் கீழ் இருக்கும் 89 இணைப்பு கல்லூரிகளும் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடவில்லை என்றும் அவ்வாறு வெளிவந்திருக்கும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் தெரிவித்துள்ளது 
 
மேலும் 89 இணைவு கல்லூரிகள் தரமற்றது என சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதற்கு அண்ணா பல்கலைக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர ஆயத்தமாகி வரும் நிலையில் இந்த வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது