தூத்துக்குடியில் பாஜக டெபாசிட் பெற்றால் அரசியலை விட்டே விலகுகிறேன்..! அனிதா ராதகிருஷ்ணன்
வரும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து பாஜக போட்டியிட்டு டெபாசிட் தொகை மட்டும் வாங்கி விட்டால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நேற்று திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குலசேகரப்பட்டணம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போது ஏவுதள திட்டத்தை நான் தான் விளம்பரம் செய்து வெளியிட்டேன். அதில் ஒரு சிறு தவறு நடந்து விட்டது, அதை பாஜகவினர் அரசியல் செய்கின்றார்கள்
நான் அண்ணாமலைக்கு ஒரு சவால் விடுகிறேன், தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு நீங்கள் டெபாசிட் மற்றும் வாங்கி விட்டால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என் சவாலை ஏற்றுக் கொள்ள அண்ணாமலை தயாரா என்று கேட்டுள்ளார்
நாங்கள் இந்துக்கள் என்று சொல்லக்கூடிய பாஜகவினரால் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவை தொட்டு பார்க்க முடியுமா என்றும் அவர் சவால் விட்டார்
Edited by Mahendran