Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அறிவில்லாத அதிமுகவை பார்த்து சிரிக்கிறார்கள்: அன்புமணி ராமதாஸ் விளாசல்!

அறிவில்லாத அதிமுகவை பார்த்து சிரிக்கிறார்கள்: அன்புமணி ராமதாஸ் விளாசல்!

சனி, 31 டிசம்பர் 2016 (09:10 IST)

Widgets Magazine

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசுகள் வழங்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதனை விமர்சித்து பேசியுள்ளார் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ்.


 
 
சென்னை தி.நகரில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவரும் தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.
 
இதில் பேசிய அவர், தமிழகத்தில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. ஆனால் மாநில அரசு மத்திய அரசிடம் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். இவர் ஏற்கனவே இரண்டு முறை ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றுள்ளார். அவருக்கு எப்படி பாரத ரத்னா விருது வழங்க முடியும்.
 
இது கூட பரவாயில்லை. ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். நோபல் பரிசு என்பது உயிருடன் இருப்பவர்களுக்கு வழங்கப்படுவது. இந்த அறிவு கூட இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றியுள்ள அதிமுகவினரை பார்த்து டெல்லியில் சிரிக்கிறார்கள் என கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இன்று மௌனம் கலைக்கிறார் சசிகலா: ஏற்பாடுகள் தீவிரம்!

அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா இன்று பதவியேற்கிறார். ராயப்பேட்டையில் உள்ள கட்சி ...

news

இறந்து போனவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை! - இது உண்மையா?

அதிமுக பொதுக்குழு இன்று அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் சென்னை வானகரத்தில் கூடியது. இந்த ...

news

ஜல்லிக்கட்டை தடை செய்ய மல்லுகட்டுவது ஏன்?: புரியாமல் தவிக்கும் சிம்பு

பல்வேறு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்வதுதான் ...

news

ராம மோகன் ராவின் சவாலுக்குப் பிறகும் நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம்? - ஸ்டாலின் காட்டம்

ராம மோகன் ராவின் சவால் பேட்டிக்குப் பிறகும், மேல் நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன் ...

Widgets Magazine Widgets Magazine