செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

பாமக தலைவர் ஆகின்றாரா அன்புமணி?

பாமக தலைவராக தற்போது ஜிகே மணி இருந்து வரும் நிலையில் விரைவில் அன்புமணி பாமகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
பாமக சட்டசபை தலைவராக ஜிகே மணி தேர்ந்தெடுத்தப்பட்டதால் அவரது கட்சி தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாமக தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது 
 
தற்போது 33வது ஆண்டு விழாவை கொண்டாடி வரும் நிலையில் அன்புமணியை விரைவில் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தெரிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் ஆட்சியை பிடிக்கும் ராமதாஸின் கனவை நனவாக்கும் என்றும் அனைவரையும் வழி நடத்துவேன் என்றும் சூசகமாக கூறியிருப்பது அவர் விரைவில் தலைவர் பதவியை ஏற்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது