புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2022 (20:33 IST)

6 மீனவர்களை கைது செய்த சிங்களப்படை: அன்புமணி கண்டனம்

anbumani
தமிழகத்தை சேர்ந்த 6 மீனவர்களை கைது செய்த சிங்களப்படைக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 
 
வங்கக்கடலில் கச்சத்தீவுக்கும்,  கோடியக்கரைக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 6 பேரை அவர்களின் விசைப்படகுடன் சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது!
 
கடந்த 10 நாட்களில்,  மூன்றாவது முறையாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர்.  சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறலை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சிங்கள அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்!(
 
கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் 23 பேரையும், அவர்களின் படகுகளுடன் மீட்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும்  விரைந்து மீட்க வேண்டும்!