1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (20:49 IST)

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது புகார் அளிக்கலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழகத்தில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக கூறப்படும் நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியுள்ளார்
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அன்பில் மகேஷ் அவர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் 
 
அதுமட்டுமின்றி பள்ளிகள் பெற்றோர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் தயக்கமின்றி புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்