வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 மே 2021 (11:57 IST)

பள்ளிக்கல்வி இயக்குனர் ராஜினாமா; ஆசிரியர்கள் அதிருப்தி! – அன்பில் மகேஸ் ஆலோசனை!

தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு புதிய ஆணையர் நியமிக்கப்பட்டதால் பள்ளிக்கல்வி இயக்குனர் ராஜினாமா செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் கல்வித்துறை ஆணையராக புதிய பதவி நியமிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஏற்கனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனரகம் ஆணையமாக மாற்றப்படுவது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இடையே அதிருப்தி நிலவுவதாக தெரிகிறது. இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கல்வித்துறை அதிகாரி, நிபுணர்களுடன் பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.