1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 6 ஜூன் 2021 (07:35 IST)

நீட் நடத்தினால் போராட்டம் வெடிக்கும் - அன்பில் மகேஷ் உறுதி!

தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 
சிபிஎஸ் இ., ஐசிஎஸ் இ ஆகிய பள்ளி அமைப்புகளின் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
 
இந்நிலஒயில், இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் உடல்நலனை கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். நீட் தேர்வு ஒரே ஒரு நாள் நடைபெறும் தேர்வு என்றாலும் அன்றைய நாள் மூலம் மாணவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.