செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (19:01 IST)

திருச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது பற்றி வரும் 30-ம் தேதி முதல்வர் முடிவு செய்வார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் உள்ள  அனைத்து மாவட்ட பள்ளிகளில் இருந்தும் அறிக்கை தயாரிக்கப்பட்டு முதல்வரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கலாம் என  தெரிவித்துள்ளனர்,  ஒரு சில மாவட்டங்களில் 6 7 8 வகுப்புகளில் மட்டும் தொடங்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆகையால் வரும் 31 தேதி ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது, அந்த கூட்டத்தின் முடிவில் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு பிறகு முதல்வர் அறிவிப்பார்.