Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா தலைமையேற்க இதுவா நேரம்? -ஆனந்தராஜ் காட்டம்

Last Modified: புதன், 28 டிசம்பர் 2016 (18:13 IST)

Widgets Magazine

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து அதிமுகவின் தலைமை பதவியான பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்கவேண்டும் என கோரிக்கை நிலவி வந்தது.
 

 


இந்நிலையில் இதனை கடுமையாக விமர்சித்தார் நடிகர் ஆனந்தராஜ். ஜெயலலிதா தற்போது தான் இறந்திருக்கிறார் அதற்குள் அந்த பதவி பற்றி பேச வேண்டாம். சசிகலா தலைமை பதவியை ஏற்க இது சரியான நேரமில்லை என கூறிவந்தார் ஆனந்தராஜ்.
 
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்க ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அப்போது அவர் கூறியபோது, செங்கோட்டையன் , பொன்னையன் பேச்சு வருத்தம் அளிக்கிறது. ஜெயலலிதாவை யாருடனும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். சுய லாபத்திற்காகவே சசிகலாவை சில அமைச்சர்கள் ஆதரிக்கிறார்கள. சசிகலா அதிமுக தலைமையேற்க இது தகுந்த நேரம் இல்லை.

மக்கள்தான் யார் தலைவர் என சொல்லவேண்டும். தொண்டர்கள் விரும்புகிற தலைமை வரவேண்டும் என்று கூறினார்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

மன்னார் குடி கும்பலிடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள் - கராத்தே ஹுசைனி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. அவர் திட்டமிட்டு கொலை ...

news

ஃபேஸ்புக்கின் அலர்ட் சேவையால் பீதியடைந்த தாய்லாந்து

பாங்காக்கில் குண்டு வெடிப்பு நேரிட்டதாக பொய்யான தகவல் சமூக இணையத்தளத்தில் பரவியதையடுத்து, ...

news

நாங்க ரொம்ப ஸ்ரிக்ட்: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரூல்ஸ் போடும் சென்னை காவல்!!

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நட்சத்திர ஹோட்டல், கிளப், உணவு மற்றும் கேளிக்கை விடுதி ...

news

ஜெ.வின் மரணத்தில் நடராஜனுக்கு தொடர்பு உண்டு - கராத்தே ஹுசைனி

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. அவர் திட்டமிட்டு கொலை ...

Widgets Magazine Widgets Magazine