1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 30 மே 2018 (14:48 IST)

100 நாளா போராடுனப்ப எங்க போனீங்க? சீறிய வாலிபர்; எஸ்கேப் ஆன ரஜினி

தூத்துக்குடியில் காயமடைந்த மக்களை பார்க்க சென்ற ரஜினிகாந்தை நீங்கள் யார்? நாங்கள் 100 நாளா போராடுனப்ப எங்க போனீங்க என்று ஒரு வாலிபர் ரஜினியைப் பார்த்து கேள்வி கேட்க ரஜினிகாந்த் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.
நடிகர் ரஜினிகாந்த தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்  போது காயமைடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 
 
ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கினார்.
 
சமூக விரோதிகளே இந்த கலவரத்திற்கு காரணம். இந்த கலவரத்திற்கு சில விஷ கிருமிகளும், சமூக விரோதிகளும்தான் காரணம் என அவர் தெரிவித்தார்.
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் ஒருவர், ரஜினியிடம் நீங்கள் யார்? நாங்கள் 100 நாளா போராடுனப்ப எங்க போனீங்க என்று கேட்டார். இதற்கு பதிலளிக்க முடியாத ரஜினி சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆனார். இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.