செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2023 (14:49 IST)

டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் தொடர்ந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்  அப்போது பேசிய அவர்,  தமிழகத்தில் கல்குவாரிகள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என கூறிய அவர், 5 ஆயிரம் கல்குவாரிகள், 3 ஆயிரம் கிரசர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்றார். 
 
கோவையில் இருந்து 5000 லோடு கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார். இந்த வேலைநிறுத்தத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என கூறிய அவர், இதனால் சாதாரண ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்த வேலைநிறுத்தம் குறித்து அரசின் கவனத்திற்கு வந்ததா? என தெரியவில்லை என்றார். அரசு எதிலும் கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டினார். 
 
டாஸ்மாக் பிரச்சனையை விட இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது எனவும் அரசிற்கு கட்டும் தொகையை விட அதிகமாக இலஞ்சம் வசூலித்து இந்த துறையை முடக்கி விட்டனர் எனவும் சாடினார். எம் சாண்ட் குவாரிகளை முடக்கி மீண்டும் மணல் குவாரிகள் அமைக்கும் வாய்ப்பை இந்த அரசை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
கேரளாவில் இருந்து ஒரு லோடு மணல் கூட எடுத்து வர முடியாது எனவும் தமிழகத்தில் இருந்து கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். ஆளுநர் தலையிட்டு கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்துபவர்கள் மற்றும் பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அதிமுக ஆட்சியில் அம்மா சிமெண்ட் குறைந்த விலையில் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார். திமுக அரசு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடங்கியுள்ளது என தெரிவித்த அவர், திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்றார். 
 
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்க துறை நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,  டாஸ்மாக்கில் கூடுதலாக 10 ரூபாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறி செந்தில்பாலாஜி குறித்து பேசாமல்  சென்றார்.