திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 நவம்பர் 2020 (08:27 IST)

திமுகவை நேரடியாக அட்டாக் செய்த அமித்ஷா!

நேற்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசியபோது முதல்முறையாக திமுகவை நேரடியாக அட்டாக் செய்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
ரூ.67,378 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நேற்று தமிழகம் வந்த அமைச்சா் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் பேசிய போது ’10 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திற்கு என்ன செய்தது என்பதை பட்டியலிட தயாரா? என சவால் விடுத்தார் 
 
அதுமட்டுமின்றி குடும்ப அரசியல் நடத்தி வரும் கட்சிகளுக்கு மக்கள் வரிசையாக பாடம் புகட்டி வருகிறார்கள் என்றும் அந்தப் பாடத்தை தமிழக மக்களும் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மத்திய அமைச்சர் அமித்ஷா இதுவரை நேரடியாக திமுகவை அட்டாக் செய்யாத நிலையில் நேற்று முதல் முறையாக அட்டாக் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் சட்டமன்ற தேர்தலில் அமித்ஷாவின் இந்த குற்றச்சாட்டுக்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதில் அளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்