1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (16:02 IST)

ஏடிஎம்-இல் கொள்ளையடித்தது எப்படி? நடித்து காட்டுகிறான் அமீர்!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் நூதனமான முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அமீர் மற்றும் வீரேந்தர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர் என்பது மூன்றாவதாக ஒரு கொள்ளையன் இன்று கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் எஸ்பிஐ ஏடிஎம் வங்கியில் கொள்ளை அடித்தது எப்படி என்று அமீரை நடித்து காட்டுமாறு போலீசார் அமீரிடம் கூறியதை அடுத்து பெரியமேடு எஸ்பிஐ ஏடிஎம் மையத்திற்கு அமீரை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அமீர் இன்னும் சிறிது நேரத்தில் கொள்ளை அடித்தது எப்படி என நடித்து காட்டவுள்ளான்.
 
இந்த நிலையில் அமீரிடம்  தொடர்ந்து நான்காவது நாளாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏடிஎம்மில் கொள்ளை எடுத்தது எப்படி என்று அமீர் நடித்து காட்டியதும் அது குறித்து ஆய்வு செய்து அந்த குறைகள் இல்லாத வகையில் ஏடிஎம் மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது