Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கூவத்தூர் விடுதிக்கு சென்ற ஆம்புலன்ஸ் - மர்மம் என்ன?

Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:10 IST)

Widgets Magazine

அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் விடுதிக்கு ஆம்புலன்ஸ் சென்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பின் உச்சத்தை அடைந்து வருகிறது..  சட்டசபையில் எனது பலத்தை நிரூபிப்பேன் என ஓ.பி.எஸ் கூறியதை அடுத்து, அனைத்து எம்.எல்.ஏக்களையும், கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் உள்ள ஒரு விடுதியில் சசிகலா தரப்பு தங்க வைத்தது... 
 
ஆனால், அவர்கள் அங்கு சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்படிருப்பதால், அவர்களின் குடும்ப உறுப்பினர்களே தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என சில வழக்குகளும், எம்.எல்.ஏக்களை காணவில்லை என ஆட்கொணர்வு மனுக்களும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
 
ஆனால், சுயவிருப்பத்தின் பேரிலேயே எம்.எல்.ஏக்கள் அங்கு தங்கியிருப்பதாக சசிகலா கூறி வருகிறார். நேற்று முன் தினம் மற்றும் நேற்று என இருமுறை சசிகலா அங்கு சென்றார். 
 
இந்நிலையில், கூவத்தூர் விடுதிக்கு இன்று ஆம்புலன்ஸும், அதில் சில மருத்துவர்களும் சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏக்கள் யாரேனும் உடல்நிலை பாதிக்கப்பட்டாரா, அல்லது அனைவருக்கும் பொதுவான மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சென்றார்களா? இல்லை, எம்.எல்.ஏக்களில் சிலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே, அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ சிகிச்சை அளிக்க சென்றார்களா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என எதுவும் தெரியவில்லை... 
 
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஒரு வாரத்தில் சட்டப்பேரவையில் பலப்பரீட்சை : ஆளுநருக்கு அட்டார்னி ஜெனரல் ஆலோசனை

தமிழக சட்டசபையை கூட்டி, பலப்பரீட்சை நடத்தலாம் என மத்திய அரசின் வழக்கறிஞர் ஆளுநருக்கு ...

news

இன்று தலைமைச்செயலகம் சென்ற முதல்வர் ஓபிஎஸ் என்ன செய்தார் தெரியுமா?

தமிழக முதலமைச்சர் பதவியை கடந்த 5-ஆம் தேதி ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது காபந்து ...

news

தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது: ஸ்டாலின் அதிரடி

ஆளுநர் மாநிலத்தில் நிலையான ஆட்சியை வழங்க முடியவில்லை என்றால் தேர்தலை நடத்துவதற்கு முயற்சி ...

news

ஆலுமா டோலுமா! அதிமுக எம். எல்.ஏக்கள் குத்தாட்டம் (வீடியோ)

கூவத்தூர் விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் உற்சாக மிகுதியில் நடனம் ஆடும் வீடியோ ...

Widgets Magazine Widgets Magazine